கதக் கலைஞர் உமா சர்மா, சுமித்ரா சரத் ராம் விருதினைப் பெற்றுள்ளார்.
இந்திய செவ்வியல் இசை மற்றும் நடனத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்கான அங்கீகாரமாக இந்த விருதானது வழங்கப் பட்டுள்ளது.
இவர் ஒரு புகழ்பெற்ற செவ்வியல் நடனக் கலைஞர் ஆவார் என்பதோடு, இந்தியாவின் கலாச்சாரப் பாரம்பரியத்திற்கு அவர் அளித்த தனித்துவமான பங்களிப்பிற்காக பத்ம பூஷன் விருதினையும் இவர் பெற்றுள்ளார்.
இந்த விருதானது 2010 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் கலாச்சார மறுமலர்ச்சியாளராக விளங்கிய, கலை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மற்றும் SBKK அமைப்பின் நிறுவனரான சுமித்ரா சரத் ராம் அவர்களின் பங்களிப்பை இது நினைவுபடுத்துகிறது.