TNPSC Thervupettagam

சுயமரியாதை திருமணச் சட்டம் மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

September 2 , 2023 322 days 724 0
  • 1955 ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின் 7(A)வது பிரிவின் கீழ் "சுயமரியாதை" திருமணங்களை நடத்துவதற்கு வழக்கறிஞர்களுக்கு எந்தவிதமான தடையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • 1968 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதியன்று, 1967 ஆம் ஆண்டு இந்து திருமண (தமிழ்நாடு சட்டத் திருத்தம்) சட்டத்திற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.
  • இந்த சட்டத் திருத்தம் ஆனது 1955 ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தில் 7-A என்ற பிரிவைச் சேர்த்து அதனைத் திருத்தியமைத்தது.
  • இருப்பினும், இந்தப் பிரிவு தமிழ்நாடு மாநிலத்திற்கு மட்டுமே நீட்டிக்கப் பட்டது.
  • 7-A என்ற பிரிவானது, "சுயமரியாதை மற்றும் மதச்சார்பற்ற திருமணங்கள்" குறித்த சிறப்பு விதிமுறைகளைக் கொண்டுள்ளது.
  • இது "இரண்டு இந்துக்களுக்கு இடையேயான எந்தவொரு திருமணத்தையும்" சட்டப் பூர்வமாக அங்கீகரிக்கிறது.
  • இதனை "சுயமரியாதை" அல்லது "சீர்திருத்தத் திருமணம்" அல்லது வேறு எந்தப் பெயராலும் குறிப்பிடப்படலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்