TNPSC Thervupettagam

சுய-சார்பு இந்தியா நிதி

November 15 , 2022 741 days 424 0
  • சுயசார்பு இந்தியா நிதி என்பது இந்திய அரசினால் தொடங்கப்பட்ட ரூ.10,000 கோடி நிதியாகும்.
  • இது இந்தியப் பங்குகள் மற்றும் பரிமாற்ற வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டாம் பிரிவினைச் சேர்ந்த மாற்று முதலீட்டு நிதியாகும்.
  • இது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறைக்கு வளர்ச்சிக்கான மூலதனத்தை வழங்குவதற்காக அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது.
  • இது தாய்-நிதி (முதன்மை) மற்றும் துணை-நிதி (நிதியின் நிதி) என்றழைக்கப்படும் கட்டமைப்பின் மூலமாக செயல்படுகிறது.
  • தாய் நிதி என்பது ஒட்டுமொத்த நிதிய மூலதனத்தில் 20 சதவீதம் வரை முதலீடு செய்யும் இந்தியப் பங்குகள் மற்றும் பரிமாற்ற வாரிய நிதியாகும்.
  • துணை நிதியானது மீதமுள்ள 80 சதவீத மூலதனத்தை மற்ற மூலங்களின் மூலமாக திரட்டப்படும் நிதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்