TNPSC Thervupettagam

சுரேஷ் மாத்தூர் குழு

June 25 , 2018 2219 days 620 0
  • இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDA- Insurance Regulatory and Development Authority of India) நாட்டில் காப்பீட்டு ஊடுருவலை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் காப்பீட்டு சந்தை நிறுவனங்கள் தொடர்பானவற்றை பரிசீலிக்க 10 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
  • IRDAவின் (காப்பீட்டு சந்தை நிறுவனங்கள்) நிர்வாக இயக்குனர் சுரேஷ் மாத்தூர், இக்குழுவின் தலைவராக செயல்படுவார்.
  • IRDA (காப்பீட்டு சந்தை நிறுவனங்களின் பதிவு) கட்டுப்பாடுகள், 2015-ஐ மீண்டும் பரிசீலிக்க இக்குழுவிற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
  • பன்னாட்டு செலவாணிய நிதியத்தின் புது விநியோகப் பாதை 2015ஆம் ஆண்டு IRDA-ஆல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் நோக்கம் பகுதி வாரியாகப் பதிவு அணுகுமுறையில் காப்பீட்டு ஊடுருவுதலை அதிகப்படுத்துவதாகும்.
  • இந்தப் பாதை மூன்று வருடங்களுக்கு நடைமுறையில் இருக்கின்றது.

இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDA)

  • IRDA-யானது இந்தியாவில் காப்பீடு நிறுவனங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ளும் சட்டப் பூர்வமான உச்சி அமைப்பாகும்.
  • இது இந்தியக் காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையச் சட்டம், 1999-ன் படி ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். இதன் தலைமையிடம் தெலுங்கானாவிலுள்ள ஹைதராபாத்தில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்