TNPSC Thervupettagam

சுர்ஜித் பல்லா – IMFன் நிர்வாக இயக்குநர்

October 2 , 2019 1762 days 657 0
  • சர்வதேச நாணய நிதியத்தின்  (International Monetary Fund - IMF) வாரியத்தில் இந்தியாவிற்கான நிர்வாக இயக்குநராக பொருளாதார நிபுணரான சுர்ஜித் எஸ் பல்லாவை மத்திய அரசு நியமித்துள்ளது.
  • இவர் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் (Economic Advisory Council to the Prime Minister / EAC-PM) பகுதிநேர உறுப்பினராகப் பணியாற்றினார்.
  • பிரதமர் தலைமையிலான நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது பல்லாவின் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இவர் பதவியேற்ற நாளிலிருந்து மூன்று வருட காலத்திற்கு அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை இப்பதவியில் நீடிப்பார்.
  • உடல்நலக் குறைவால் காலமான ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநரான சுபிர் கோகர்னுக்குப் பிறகு பல்லா இப்பதவியில் நியமிக்கப் பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்