தமிழ்நாடு மாநிலமானது, சுறா மீனின் உடல் உறுப்புகளின் சட்டவிரோத வர்த்தகத்தில் சுமார் 65% பங்கினைக் கொண்டுள்ளது.
2010 முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் சுமார் 16,000 கிலோ சுறா மீனின் துடுப்புகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இது சுறாவிலிருந்து பெறப்பட்டப் பொருட்களில் சுமார் 80% ஆகும்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் சிங்கப்பூர், ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பகுதி, இலங்கை மற்றும் சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு அனுப்பப்பட்டவை ஆகும்.
சுறா மீனின் இறைச்சியானது உணவாகவும், அதன் தோல் தோல்பொருட்களாகவும், கல்லீரல் எண்ணெய் (ஸ்குவாலீன்) உயவுப் பொருளாகவும், பல்வேறு அழகுசாதனப் பொருட்களாகவும், வைட்டமின் A-இன் மூலமாகவும் உட்கொள்ளப் படுகிறது.
இந்தியாவில் பதிவாகியுள்ள 160 சுறா வகைகளில், 26 சுறாக்கள் மற்றும் திருக்கை மீன்கள் ஆகியவற்றிற்கு மட்டுமே, 1972 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் உள்ள I மற்றும் II வது அட்டவணைகளில் பட்டியலிடப்பட்டு, மிக உயர்ந்தப் பாதுகாப்பு அந்தஸ்து வழங்கப் பட்டுள்ளன.