TNPSC Thervupettagam

சுறா உடல் பாகங்களின் சட்டவிரோத வர்த்தகம்

March 18 , 2024 251 days 274 0
  • தமிழ்நாடு மாநிலமானது, சுறா மீனின் உடல் உறுப்புகளின் சட்டவிரோத வர்த்தகத்தில் சுமார் 65% பங்கினைக் கொண்டுள்ளது.
  • 2010 முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் சுமார் 16,000 கிலோ சுறா மீனின் துடுப்புகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இது சுறாவிலிருந்து பெறப்பட்டப் பொருட்களில் சுமார் 80% ஆகும்.
  • பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் சிங்கப்பூர், ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பகுதி, இலங்கை மற்றும் சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு அனுப்பப்பட்டவை ஆகும்.
  • சுறா மீனின் இறைச்சியானது உணவாகவும், அதன் தோல் தோல்பொருட்களாகவும், கல்லீரல் எண்ணெய் (ஸ்குவாலீன்) உயவுப் பொருளாகவும், பல்வேறு அழகுசாதனப் பொருட்களாகவும், வைட்டமின் A-இன் மூலமாகவும் உட்கொள்ளப் படுகிறது.
  • இந்தியாவில் பதிவாகியுள்ள 160 சுறா வகைகளில், 26 சுறாக்கள் மற்றும் திருக்கை மீன்கள் ஆகியவற்றிற்கு மட்டுமே, 1972 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் உள்ள I மற்றும் II வது அட்டவணைகளில் பட்டியலிடப்பட்டு, மிக உயர்ந்தப் பாதுகாப்பு அந்தஸ்து வழங்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்