TNPSC Thervupettagam

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான நீர் சுத்திகரிப்பு முறை

May 20 , 2024 59 days 120 0
  • விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய பெட்ரோலியம் & ஆற்றல் கல்வி நிறுவனம் (IIPE) ஆனது, மற்ற ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து, ‘மென்சவ்வு மேற்பரப்பு மாற்ற நுட்பம்’ எனப்படும் ஒரு பயனுள்ள சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான தீர்வைக் கண்டறிந்துள்ளது.
  • பல்வேறு நிலைகளில் நீர்ச் சுத்திகரிப்பில், குறிப்பாக சேறு நிறைந்த நதி நீரின் சுத்திகரிப்பில் உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதனை நோக்கம் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது.
  • இந்த நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இருப்பதோடு, நச்சுத்தன்மையற்ற வாயுக்களைப் பயன்படுத்துகிறது.
  • இது மேற்பரப்பு மாற்றச் செயல்முறைகளில் கடுமையான இரசாயனங்கள் அல்லது கரைப்பான்களைப் பயன்படுத்துவதற்கானத் தேவையைக் குறைத்து சுற்றுச்சூழல் தாக்கத்தைக் குறைக்கிறது.
  • சேறு நிறைந்த நீர் ஆக்ஸிஜன் அளவைக் குறைப்பதோடு, சூரிய ஒளியைத் தடுத்து மாசுபடுத்திகளைக் கடத்துவதால் அதன் வாழ்விடத் தரமிழப்பு, உயிரினங்களின் இடப் பெயர்ச்சி மற்றும் நீர்வழி நோய்களின் பரவல் ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்