மே 11 ஆம் தேதியன்று, முதன்முறையாக சர்வதேச அளவில் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடானது 415 ppm (ppm) என்ற அளவைக் கடந்துள்ளது.
இது ஹவாயில் உள்ள மவுனா லோ ஆய்வகத்தில் உள்ள உணரிகளால் அளவிடப்பட்டது.
1958 ஆம் ஆண்டில் இதே இடத்தில் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவின் அளவானது 315 ppm ஆக இருந்தது.
வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு விரைவாக அதிகரிப்பது புவி வெப்பமயமாதலைக் காட்டும் குறியீடுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
ஏன் இது அபாயகரமானது?
கார்பன் டை ஆக்ஸைடு வாயு வளிமண்டலத்தில் மிக அதிக வாழ்நாட்களைக் கொண்டுள்ளது. இது 100 முதல் 300 ஆண்டுகள் வரை வளிமண்டலத்தில் இருக்கும்.
புவியின் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அளவு அதிகம் ஆகும் பொழுது கார்பன் டை ஆக்ஸைடு வாயுவின் அளவானது பொதுவாக 450 ppm இருக்கும் என்று கருதப்படுகின்றது.
தற்போதைய கார்பன் டை ஆக்ஸைடு வாயு வளர்ச்சி விகிதம் நீடித்தால் 12 ஆண்டுகளுக்கு (2030 ஆம் ஆண்டில்) முன்னதாகவே 450 ppm என்ற நிலையினை அடைந்து விடும் என்று கருதப்படுகின்றது.