TNPSC Thervupettagam

சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு

June 10 , 2022 773 days 492 0
  • இது அமெரிக்காவின் யேல் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஒரு வருடாந்திரப் பகுப்பாய்வு ஆகும்.
  • இது உலகெங்கிலும் உள்ள நீடித்தத் தன்மையின் நிலை பற்றியத் தரவு சார்ந்த ஒரு மதிப்பீட்டை வழங்குகிறது.
  • 180 நாடுகளை தரவரிசைப் படுத்திடுவதற்காக, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பொது சுகாதாரம் மற்றும் பல்லுயிர்த் தன்மை ஆகியவை இதில் பயன்படுத்தப்படும் 40 செயல்திறன் காரணிகளில் அடங்கும்.
  • டென்மார்க் மற்றும் ஐக்கியப் பேரரசு போன்ற சில நாடுகள் மட்டுமே 2050 ஆம் ஆண்டிற்குள் நிகரச் சுழிய உமிழ்வு நோக்கங்களை எட்டும் பாதையில் உள்ளன.
  • உலகின் மிகவும் நீடித்தத் தன்மையுடைய நாடாக டென்மார்க் முதலிடத்தில் உள்ளது.
  • இதில் 180 நாடுகளில் இந்தியா கடைசி இடத்தில் உள்ளது.
  • இதன்படி, சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நான்கு நாடுகள், தற்போதையப் போக்குகளில் தொடர்ந்தால், 2050 ஆம் ஆண்டில் உலகளாவிய எஞ்சியப் பசுமைக் குடில் வாயு உமிழ்வில் பாதிக்கும் மேலானதாக இவற்றின் பங்களிப்பு இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்