சமீபத்தில் யேல் பல்கலைக்கழகமானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டுக் குறியீட்டின் 12வது பதிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தக் குறியீடானது தேசிய மற்றும் சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் செயல்பாடு மீதான 10 ஆண்டுக் கண்காணிப்பை அளித்துள்ளது.
இந்தக் குறியீடானது சுற்றுச்சூழல் ஆரோக்கியம் மற்றும் சூழலியல் உயிர்ப்புத் தன்மை ஆகியவற்றை உள்ளடக்கிய 11 வகைகளின் கீழ் 32 செயல்பாட்டுக் குறிகாட்டிகளுடன் 180 நாடுகளைத் தரவரிசைப்படுத்துகின்றது.
180 நாடுகளிடையே இந்தியா 168வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டைத் தவிர அனைத்துத் தெற்காசிய நாடுகளும் தரவரிசையில் இந்தியாவிற்கு முந்தைய இடங்களில் உள்ளன.