இந்தியாவில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடானது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 1986 என்ற சட்டத்தால் சட்டப்பூர்வமாக ஆதரிக்கப் படுகிறது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு முறை மற்றும் செயல்முறை குறித்த பல்வேறு விதிகள் இதில் உள்ளன.
கோவிட்-19 சூழலிருந்து எழும் திடீர்ச் சூழ்நிலையை எதிர்கொள்ள, பல்வேறு மருந்துகளின் கிடைக்கும் தன்மை அல்லது உற்பத்தியை அதிகரிப்பதற்காக சுற்றுச்சூழல் அமைச்சகமானது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பு - 2006 என்ற அறிவிக்கையில் ஒரு திருத்தத்தைச் செய்துள்ளது.
பல்வேறு நோய்களை எதிர்கொள்ள தயாரிக்கப்படும் மொத்த மருந்துகள் மற்றும் அதற்கான பல்வேறு இடைநிலை உற்பத்திப் பொருள்கள் தொடர்பான அனைத்துத் திட்டங்களும் செயல்பாடுகளும் தற்போதுள்ள வகை ‘ஏ’ என்ற நிலையிலிருந்து வகை ‘பி 2’ என்ற நிலைக்கு மறுவகை செய்யப் பட்டுள்ளன.