2018 ஆம் ஆண்டு மார்ச் 31 (2017-18) அன்று நிறைவடைந்த நிதியாண்டிற்கான அறிக்கையை இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் தாக்கல் செய்தார்.
இந்த அறிக்கையின் படி, 2014 முதல் 2016 வரை, இந்தியாவில் சுற்றுச்சூழல் தொடர்பான குற்றங்களில் 40% குற்றங்கள் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து பதிவாகியுள்ளன.
வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவுகள் இந்த மாநிலத்தில் நிறுவப்பட வில்லை என்று இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
உள்ளூர் ஆலோசனைக் குழு இல்லாத காரணத்தினால் ரந்தம்போர் புலிகள் காப்பகம் மற்றும் சரிஸ்கா புலிகள் காப்பகம் ஆகியவை சரியாக கட்டுப்படுத்தப் படவில்லை என்று இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.