TNPSC Thervupettagam

சுற்றுச்சூழல் நச்சியல் மையம் – கோயம்புத்தூரில் உள்ள SACON

August 25 , 2019 1921 days 670 0
  • மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கோயம்புத்தூருக்கு அருகில் ஆனைகட்டியில் உள்ள சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை அறிவியல் மையத்தில் (Salim Ali Centre for Ornithology and Natural Sciences - SACON) சுற்றுச்சூழல் நச்சியலுக்கான ஒரு தேசிய மையத்தைத் திறந்து வைத்தார்.
  • SACON 1990 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
  • இந்த மையமானது உணவுச் சங்கிலியின் மூலமாக பறவைகளை அடைகின்ற பூச்சிக் கொல்லிகள், கன உலோகங்கள் மற்றும் மருந்துகள் போன்ற சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் காரணிகளின் தீங்கான விளைவுகள் குறித்து ஆய்வு செய்யும்.
  • பறவைகளின் தொடர்ச்சியான இறப்பை சுற்றுச்சூழல் காரணிகளால் விளக்க முடியாத காரணத்தினால் சுற்றுச்சூழல் நச்சியல் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது.
  • உதாரணம் : கழுகுகளின் அழியும் நிலை. 40 மில்லியன் எண்ணிக்கையிலிருந்து ஏறத்தாழ ஓராயிரம் கழுகுகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்