மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சுழல் பாதுகாப்புப் பகுதி குறித்து முன்கூட்டிய அறிவிப்பு வெளியிடுவதைத் துரிதப்படுத்த 6 மாநிலங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.
கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகியவை இந்த 6 மாநிலங்களாகும்.
மத்திய அரசானது மேற்குத் தொடர்ச்சி மலையின் பன்முகத் தன்மையைப் பாதுகாப்பதற்காக டாக்டர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் ஓர் உயர் மட்டப் பணிக் குழுவை அமைத்தது.
அதற்கு முன்பு காட்கில் தலைமையில் ஒரு குழுவானது அமைக்கப் பட்டிருந்தது.
கஸ்தூரி ரங்கன் அறிக்கையானது மேற்குத் தொடர்ச்சி மலையின் 37% பகுதியை ESA என்ற பகுதியின் கீழ் கொண்டு வர முயல்கின்றது. காட்கில் அறிக்கையானது இதனை 64% (ESA - Ecologically Sensitive Area) ஆகப் பரிந்துரைத்திருந்தது.
ESAகள் என்பவை பாதுகாக்கப்பட்ட பகுதிகள், தேசியப் பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் ஆகியவற்றைச் சுற்றிலும் 10 கிலோ மீட்டருக்குள் இருக்கும் ஒரு பகுதியாகும்.
ESA ஆனது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 1986 என்ற சட்டத்தின் கீழ் மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தினால் அறிவிக்கப் படுகின்றன.