சுற்றுச்சூழல் அமைப்பினை அறிவியல் ரீதியில் பாதுகாப்பதற்காக 13 வனவிலங்குச் சரணாலயங்களை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலங்களாக (Eco Sensitive Zones - ESZ) மாற்றுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 11 சரணாலயங்கள் பின்வருமாறு
வடுவூர் பறவைகள் சரணாலயம்
கஞ்சிரான்குளம் பறவைகள் சரணாலயம்
ஸ்ரீவில்லிபுத்தூர் நரைத்த அணில் சரணாலயம்
மேகமலை வனவிலங்கு சரணாலயம்
மன்னார் வளைகுடா கடல்சார் தேசியப் பூங்கா
வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்
கொடைக்கானல் வனவிலங்கு சரணாலயம்
சக்கரக் கோட்டை பறவைகள் சரணாலயம்
வல்லநாடு புல்வாய் வகை மான் சரணாலயம்
உசூடு ஏரி பறவைகள் சரணாலயம்
கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம்
சத்தீஷ்கரில் உள்ள அச்சனக்மர் புலிகள் காப்பகம் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள துங்கரேஷ்வர் வனவிலங்கு சரணாலயம் ஆகியவையும் ESZ ஆக மாற்றப் படுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ESZ
ESZகள் என்பது பாதுகாக்கப்பட்ட பகுதிகள், தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் ஆகியவற்றிலிருந்து 10 கிலோ மீட்டர் வரை நீட்டிக்கப்பட்டுள்ள பகுதியாகும்.
இது உயர் பாதுகாப்புப் பகுதியிலிருந்து குறைவான பாதுகாப்புக் கொண்ட பகுதி வரையில் ஒரு இடைநிலை மண்டலமாக செயல்படுன்கிறது.
தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களைச் சுற்றி சுரங்க, குவாரி மற்றும் கனரகக் கட்டுமானம் போன்ற சில நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளதால் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிர்ச்சியைத் தாங்கக் கூடியதாக இது செயல்படுகின்றது.
இது எளிதில் பாதிக்கப்படக் கூடிய சுற்றுச்சூழல் அமைப்பு மீதான எதிர்மறை விளைவுகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இறுதி ESZ அறிவிக்கையானது அத்தகைய பாதுகாக்கப்பட்டுள்ள பகுதிகளில் 1 கிலோ மீட்டர் பரப்பிற்குள் சுரங்க, கல் குவாரி மற்றும் கற்களை நொறுக்கும் அலகுகளை அமைக்கத் தடை விதிப்பதற்கு வழிவகை செய்கின்றது.
ESZ அறிவிக்கையானது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம்,1986 மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகள்,1986 ஆகியவற்றின் கீழ் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தினால் வெளியிடப்படுகின்றது.
ஆனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம்,1986 ஆனது “சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலங்கள்” என்ற சொல்லைக் குறிப்பிடவில்லை.
2006 ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றமானது அனைத்து மாநிலங்களும் நான்கு வாரத்திற்குள் ESZகளை அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.
இந்தியாவில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் 30 சதவிகிதத்திற்கும் மேலான பகுதிகள் இறுதி ESZ அறிவிக்கையின் கீழ் உள்ளடங்கியுள்ளன.
இந்தியாவில் உள்ள 651 பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் 316 பகுதிகள் இறுதி ESZ அறிவிக்கையில் உள்ளடங்கியுள்ளன.