புது டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச (IGI - Indira Gandhi International) விமான நிலையத்தில் சுற்றுலா எளிதாக்கல் மற்றும் தகவல் மையத்தை மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) K.J அல்போன்ஸ் திறந்து வைத்தார்.
பார்வையாளர்களுக்கான இந்த எளிதாக்கல் மற்றும் தகவல் வசதி மையமானது இந்த வகையில் அரசின் முதலாவது திட்டமாகும்.
IGI விமான நிலையத்திற்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பார்வையாளர்களுக்கு 24 x 7 என்ற கால அளவில் தகவல்களை வழங்கும் நோக்கத்துடன் சுற்றுலா அமைச்சகமானது இதனை அமைத்துள்ளது.
மேலும் இந்த மையமானது ஆங்கிலமில்லாத மொழி பேசும் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவ சுற்றுலா அமைச்சகத்தின் 24 x 7 மணி நேர உதவி எண்ணான 1363 என்ற எண்ணுடன் இணைக்கப்படும்.