உலகிலேயே பீகார் மாநிலம் மிக விரைவாக மலிவான குடிநீரை வழங்கவுள்ளது.
முதன்முறையாக தண்ணீர் தொடர்பான திட்டமான சுலாபக் ஜல் பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் சுலாபக் இண்டர்நேஷனல் (Sulab International) என்னும் நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் நாட்டில் ‘சுலாபக் சவ்ச்சல்யா‘ என்னும் கருத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
‘சுலாபக் ஜல்’ என்பது அசுத்தமான குளம் மற்றும் நதிநீரை சுத்தமான குடிநீராக மாற்றும் திட்டமாகும்.
இத்திட்டத்தின் மூலம், மக்கள் எளிதாக சுத்தமான குடிநீரை 50 பைசா/லிட்டர்க்குப் பெற முடியும்.
ஆர்சனிக்
நேபாள எல்லையை ஒட்டியுள்ள வடபீகாரின் பல மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீர் ஆர்சனிக் மற்றும் மற்ற இரசாயனங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றின்படி (WHO-World Health Organization) ஆர்சனிக் என்பது பூமியின் மேல் ஓட்டில் இயற்கையாக இருக்கும் கூறாகும். இது பூமியின் எல்லா இடங்களிலும் பரவியுள்ளது. (வாயு, நீர் மற்றும் நிலம்) இது கனிம வடிவத்தில் அதிக நச்சுத் தன்மையை உடையது.
அசுத்தமான குடிநீர், அந்தக் குடிநீரால் தயாரிக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றில் உள்ள கனிம ஆர்சனிக் நீண்ட காலமாக வெளிப்படும்போது தோல் சிதைவு அல்லது புற்றுநோய் ஏற்படும்.