உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 01 அன்று சுழியப் பாகுபாடு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இது சகிப்புத் தன்மை, இரக்க குணம் மற்றும் அமைதி ஆகியவற்றை ஊக்குவிப்பதன் மூலம் தனித்துவம், அனைவரையும் உள்ளடக்குதல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை அனுசரிப்பதை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
இத்தினம் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகளின் எச்ஐவி/எய்ட்ஸ் திட்டத்தினால் முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் மற்றும் இதர சர்வதேச அமைப்புகள் ஆகியவை 2014 ஆம் ஆண்டு மார்ச் 01 அன்று இத்தினத்தை அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடின.