TNPSC Thervupettagam

சுழிய அளவு வேட்டையாடல் சம்பவங்கள் பதிவு

January 5 , 2023 563 days 317 0
  • அசாம் மாநிலத்தில் 2022 ஆம் ஆண்டில் காண்டாமிருகங்கள் எதுவும் வேட்டையாடப் படவில்லை என்று அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஜனவரி 01 ஆம் தேதியன்று அறிவித்தார்.
  • அசாம் மாநிலத்தில் 2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு காண்டாமிருக வேட்டையாடுதல் சம்பவங்கள் எதுவும் பதிவாகாதது இதுவே முதல் முறையாகும்.
  • கடைசியாக 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதியன்று கோலாகாட் மாவட்டத்தில் உள்ள கோஹோராவில் அமைந்த ஹிலகுண்டா எனுமிடத்தில் காண்டாமிருகங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் பதிவானது.
  • இந்தியக் காண்டாமிருக (Rhinoceros unicornis) இனங்கள் பிரம்மபுத்திராப் பள்ளத்தாக்கு, வடக்கு வங்காளத்தின் சில பகுதிகள் மற்றும் தெற்கு நேபாளத்தின் சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது.
  • இந்தியக் காண்டாமிருக இனங்கள் IUCN அமைப்பின் சிவப்புப் பட்டியலில் பாதிக்கப் படக்கூடிய இனங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்