TNPSC Thervupettagam

சுழிய இறப்புப் பெருவழிப் பாதை

February 9 , 2019 1989 days 539 0
  • டெல்லி அரசாங்கம் விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கத்துடன் சுழிய இறப்புப் பெருவழிப் பாதையைத் தொடங்கியுள்ளது.
  • சாலைப் பாதுகாப்பு வாரத் தொடக்க விழாவின் போது டெல்லியின் போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட்டால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
  • டெல்லியின் வெளி வட்டச் சாலையில் பல்சாலா சௌக் மற்றும் புராரி சௌக் ஆகிய இடங்களுக்கு இடையே உள்ள 3 கிலோ மீட்டர் தொலைவுள்ள பகுதி இது தொடர்பான ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • விபத்துகள், சாலைப் பொறியியல், சாலையைப் பயன்படுத்துவோர்கள் ஆகியோரைக் கொண்டு அறிவியல் பூர்வமான ஆய்வுக்காக இந்த 3 கிலோ மீட்டர் பாதையானது கண்காணிக்கப்படும்.
  • மேலும் இந்த பெருவழிப் பாதையில் காவல் துறை கண்காணிப்பு மற்றும் அவசர கால உதவி போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதி செய்யப்படும் என்று வல்லுநர்கள் உறுதியளித்துள்ளனர்.
  • இது டெல்லியில் உள்ள சாலைகளில் ஏற்படும் விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதற்காக டெல்லி போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, பொதுப் பணித் துறை ஆகிய துறைகள் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஒரு முன்னெடுப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்