TNPSC Thervupettagam

சுவச்தா பக்வாடா

August 3 , 2018 2181 days 620 0
  • மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகம், அதனுடன் இணைக்கப்பட்ட அலுவலகங்கள் மற்றும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் எண்ணெய் மற்றும் வாயுக்களுக்கான மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவை சுவச்தா பக்வாடாவை 2018 ஆம் ஆண்டு ஜூலை 01 முதல் ஜூலை 15 வரையிலான இரண்டு வார காலத்திற்கு கொண்டாடியது.
  • மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகம் கொண்டாடிய இந்தப் பக்வாடாவின் முக்கியக் கருத்துரு, “புதுப்பித்தல் மற்றும் நீடிப்புத்திறன்” ஆகும்.
  • முதன்முறையாக எண்ணெய் மற்றும் வாயுக்களுக்கான மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட அலுவலகங்களுக்கான சுவச்தா தர வரிசை வெளியிடப்பட்டது.
    • முதலாவது - ONGC (Oil and Natural Gas Corporation)
    • இரண்டாவது - IOCL (Indian Oil Cooperation Ltd)
    • மூன்றாவது - HPCL (Hindustan Petroleum Corporation Ltd)
  • சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘Fortune Global 500’ பட்டியலில் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனம் (ONGC) 197வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • சமீபத்தில் நடைபெற்ற இன்பரா ஐகான் நிகழ்ச்சியில் இன்பரா ஜகான் விருது (INFRA Icon Award) ஒன்ஜிசி (ONGC)-க்கு வழங்கப்பட்டது.
  • ஏப்ரல் 2016-ல் சுவச்தா பக்கவாடா தொடங்கப்பட்டது.
  • இதன் நோக்கம் பிரச்சனைகள் மீதான தீவிரமான கவனத்தை செலுத்துதல் ஆகும். அமைச்சகங்கள்/அவற்றின் துறைகள் ஆகியவை சுவச்தாவை பதினைந்து நாட்களுக்கு கடைபிடித்து வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்