குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகம் ‘சுவச் சர்வேக்ச கிராமின் 2018’ எனும் கிராமப்புற தூய்மைத் திட்டத்தினைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தில் தரமான மற்றும் அளவுகள் அடிப்படையிலான மதிப்பீட்டில் அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் தரம் பிரிக்கப்படும்.
இந்த தரவரிசை ஒரு விரிவான தூய்மை அளவுருக்களை கணக்கில் கொள்ளும்.
குடிமக்களின் கருத்து மற்றும் நேரடியாக கவனிக்கப்பட்ட பொதுவான பகுதிகள் ஆகியவற்றின் கலவையும் இந்த தரவரிசையில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
குடிமக்களிடமிருந்து தகவல்களை சேகரிக்க ஒரு கைபேசி செயலி மற்றும் நேரடியான இணையதள நடைமுறையும் அமைக்கப்படும்.