தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, நாட்டின் சுற்றுப்புறத் தூய்மை நிலைமையின் கணக்கெடுப்பு ஆய்வான “தி சுவச் சர்வேக்ஷான்“ (Swachh Survekshan) கணக்கெடுப்பின் 2018-ஆம் ஆண்டிற்கான பதிப்பு துவங்கப்பட்டுள்ளதென மத்திய அரசு அறிவித்துள்ளது.
இக்கணக்கெடுப்பின் கீழ், ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கட்தொகையுடைய 500 நகரங்கள் தேசிய அளவில் தரவரிசைப்படுத்தப்படும். ஒரு இலட்சத்திற்கும் குறைவான மக்கட் தொகையுடைய 3541 நகரங்கள் மாநிலம் மற்றும் பிராந்திய அளவில் தரவரிசையிடப்படும்.
இந்த ஆண்டு இக்கணக்கெடுப்பு ஜனவரி முதல் மார்ச் வரை மேற்கொள்ளப்பட உள்ளது.
2016-ஆம் ஆண்டிற்கான நகர்ப்புறங்களின் தூய்மையுடைமை பற்றிய இக்கணக்கெடுப்பின் படி மதிப்பீடு செய்யப்பட்ட 73 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுள் இந்தியாவின் தூய்மையான நகரமாக “மைசூர்“அறிவிக்கப்பட்டது.
அதேபோல் 2017-ஆம் ஆண்டிற்கான நகர்ப்புறங்களின் தூய்மையுடைமை பற்றிய இக்கணக்கெடுப்பின்படி, மதிப்பீடு செய்யப்பட்ட 434 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுள் (ULB-Urban Local Body) இந்தியாவின் தூய்மையான நகரமாக “இந்தூர்“ அறிவிக்கப்பட்டது.