கடந்த ஆண்டு சுவிஸ் வங்கிகளில் இந்திய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் வைத்திருந்த பண மதிப்பில் கணிசமான வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கியின் கூற்றுப்படி, இந்த நிதிகள் 2023 ஆம் ஆண்டில் 70% சரிந்து 1.04 பில்லியன் சுவிஸ் பிராங்குகளாக (சுமார் 9,771 கோடி ரூபாய்) குறைந்து உள்ள நிலையில் இது கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைவான அளவு ஆகும்.
2023ம் ஆண்டின் இறுதியில் சுவிஸ் வங்கிகளின் இந்திய வாடிக்கையாளர்களுக்கான மொத்தக் கடன்கள் 1,039.8 மில்லியன் பிராங்குகளாக இருந்தன.
சுவிஸ் வங்கிகளில் இந்திய வாடிக்கையாளர்களின் மொத்த நிதி 2021 ஆம் ஆண்டில் 3.83 பில்லியன் பிராங்குகள் என்ற அளவில் உச்சத்தைத் தொட்டது என்பதோடு இது கடந்த 14 ஆண்டுகளில் பதிவாகாத மிக அதிக அளவாகும்.
சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நிதிகளுக்கான உலகளாவியத் தரவரிசையில், 2023 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியா 67வது இடத்தில் இருந்ததோடு ஒரு வருடத்திற்கு முன்பு இந்தியா 46வது இடத்தில் இருந்தது.
அதே நேரத்தில், ஐக்கியப் பேரரசு, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகியவை இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன.