TNPSC Thervupettagam
August 7 , 2019 1818 days 630 0
  • இந்தியாவில் இராஜதந்திர உறவிற்கு ஒத்துணர்வு மற்றும் மனித அணுகுமுறையை கொண்டு வந்ததற்காக பாராட்டப்பட்ட 67 வயது நிரம்பிய முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் காலமானார்.
  • சுஸ்மா சுவராஜ் பின்வருவனவற்றில் முதலாவதாகத் திகழ்ந்துள்ளார்.
    • ஹரியானா மாநிலத்தில்  இந்தியாவின் இளம் வயது கேபினெட் அமைச்சர் (1977 ஆம் ஆண்டில் அவருடைய வயது 25)
    • 1998 ஆம் ஆண்டில் தில்லியின் முதலாவது பெண் முதலமைச்சர்.
    • நாட்டில் உள்ள தேசிய அரசியல் கட்சியின் முதலாவது பெண் செய்தித் தொடர்பாளர்.
    • இந்திரா காந்திக்குப் பின்பு வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்த இரண்டாவது பெண் (2014-19)
    • தலைசிறந்த நாடாளுமன்றவாதி விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட இந்திய நாடாளுமன்றத்தின் முதலாவது மற்றும் ஒரே பெண் நாடாளுமன்ற உறுப்பினர்.
    • பிஜேபியின் முதலாவது பெண் முதலமைச்சர், மத்திய அமைச்சர், பொதுச் செயலாளர், செய்தித் தொடர்பாளர், எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்.
    • சோனியா காந்திக்குப் (1999 – 2004) பின்பு மக்களவையில் எதிர்க் கட்சித் தலைவராகப் பதவி வகித்த இரண்டாவது பெண் சுஸ்மா சுவராஜ் (2009 – 14) ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்