TNPSC Thervupettagam

சூரியசக்தியினால் இயங்கும் புதிய அணு உலை

January 23 , 2023 675 days 401 0
  • ஐக்கிய இராஜ்ஜியத்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆனது, நெகிழிக் கழிவுகள் மற்றும் பசுமை இல்ல வாயுக்கள் ஆகியவற்றினை நிலையான எரிபொருள்கள் மற்றும் பிற மதிப்பு மிக்கப் பொருட்களாக மாற்றும் ஒரு முறையினை உருவாக்கி உள்ளது.
  • இது சூரிய சக்தி மூலம் பெறப்படும் ஆற்றலைப் பயன்படுத்துகிறது.
  • இந்த ஒருங்கிணைந்த அணு உலை இரண்டு தனித்தனி பெட்டகங்களைக் கொண்டு உள்ளது.
  • இதில் ஒரு பெட்டகமானது நெகிழிப் பொருட்களுக்கும் மற்றொன்று பசுமை இல்ல வாயுக்களுக்குமானதாகும்.
  • இந்த உலையானது, பெரோவிசுக்கைட்டு என்ற ஒரு கனிமத்தினால் ஆன ஒளி உட் கிரகிப்பானைப் பயன்படுத்துகிறது.
  • பெரோவிசுக்கைட்டு என்பது அடுத்தத் தலைமுறைத் தொழில்நுட்பம் சார்ந்த சூரிய மின்கலங்கள் உற்பத்தியில் சிலிக்கானுக்கு மாற்றாக அமையக்கூடிய ஒரு நம்பத்தகு மாற்றாக இருக்கும்.
  • இந்த உலையானது, பாலி எத்திலீன் டெரெப்தாலேட் (PET) நெகிழிக் குடுவைகள் மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றினை கிளைகோலிக் அமிலமாக மாற்றுவதுடன் கார்பன் மோனாக்சைடு, செயற்கை வளிமம் அல்லது படிவங்கள் போன்ற பல்வேறு கார்பன் சார்ந்த எரிபொருளாக மாற்றுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்