TNPSC Thervupettagam

சூரியசக்தி ஒளி மின்னழுத்த தகடு உற்பத்தி நிலை 2024

April 7 , 2024 103 days 245 0
  • இந்தியா 2023 ஆம் ஆண்டில் 20.8 ஜிகாவாட் அளவில் சூரிய மின்சக்தி தகடு உற்பத்தித் திறன் மற்றும் 3.2 ஜிகாவாட் அளவில் புதிய ஒளி மின்னழுத்தக் கலன் உற்பத்தி ஆலைகளை நிறுவியது.
  • 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியன்று நாட்டின் ஒட்டு மொத்த சூரியசக்தி தொகுப்பு உற்பத்தித் திறன் ஆனது 64.5 ஜிகாவாட்டாக இருந்தது, அதே நேரத்தில் அதன் சூரிய மின்கலத் திறன் ஆனது 5.8 ஜிகா வாட்டை எட்டியது.
  • குஜராத் மாநிலம் ஆனது, நாட்டின் ஒட்டு மொத்த ஒளி மின்னழுத்த உற்பத்தித் திறனில் 46.1% பங்கினை கொண்டுள்ளது.
  • தெலுங்கானா அனைத்து சூரிய மின்கல உற்பத்தி திறனில் 39% பங்கினைக் கொண்டு உள்ளது.
  • இந்தியா 2023 ஆம் ஆண்டில் 16.2 GW தொகுதிகளை இறக்குமதி செய்த நிலையில், இது 2022 ஆம் ஆண்டில் 10.3 GW ஆக இருந்த அளவை விட 158% அதிகமாகும்.
  • உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள் ஆனது 2023 ஆம் ஆண்டில் 4.8 ஜிகாவாட் சூரியசக்தி தொகுப்புகளை ஏற்றுமதி செய்த நிலையில், இது 2022 ஆம் ஆண்டில் 1.6 ஜிகாவாட்டாக இருந்த அளவை விட 204% அதிகரித்துள்ளது.
  • இந்தியாவின் சூரியசக்தி மின்கல இறக்குமதி ஆனது 2023 ஆம் ஆண்டில் 15.6 GW ஆக இருந்த நிலையில், இது ஆண்டிற்கு 169% அதிகரித்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் 10 மெகாவாட்டாக இருந்த சூரியசக்தி மின்கல ஏற்றுமதியானது 2,765% அதிகரித்து 2023 ஆம் ஆண்டில் 286.3 மெகாவாட் திறனை எட்டியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்