குடிமக்கள் நுகர்வோர் மற்றும் குடிமை நடவடிக்கை குழு (CAG) ஆனது புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் செயல் திறன் குறித்த அறிக்கையைச் சமீபத்தில் வெளியிட்டது.
தமிழ்நாடு புதுப்பிக்க இயலாத எரிசக்தியை விட புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் நிறுவப்பட்ட திறனை அதிகமாகக் கொண்டிருந்தாலும், மின்சாரம் தயாரிப்பதற்கு தமிழக மாநிலம் நிலக்கரியையே அதிகம் சார்ந்துள்ளது.
மேலும், சூரியசக்தி-காற்றாற்றல் கலப்பு அமைப்பின் கட்டமைப்பானது தமிழகத்தில் இன்னும் உருவாக்கப்படவில்லை.
2020-2021 ஆம் ஆண்டில் மின் உற்பத்திக்கான புதுப்பிக்க இயலாத ஆதாரங்களின் நிறுவப் பட்ட திறன் 16,219 மெகாவாட் (MW) ஆகும்.
காற்றாற்றல், சூரியசக்தி, நீர்வளம் மற்றும் உயிரி வளம் ஆகியப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களின் திறன் 16,276 மெகாவாட் ஆகும்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் பங்கு, மொத்த மின்சாரக் கலப்பில் வெறும் 22% மட்டுமே ஆகும்.