TNPSC Thervupettagam

சூரியசக்தி-காற்றாற்றல் கலப்பின முறை

June 19 , 2023 526 days 284 0
  • குடிமக்கள் நுகர்வோர் மற்றும் குடிமை நடவடிக்கை குழு (CAG) ஆனது புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் செயல் திறன் குறித்த அறிக்கையைச் சமீபத்தில் வெளியிட்டது.
  • தமிழ்நாடு புதுப்பிக்க இயலாத எரிசக்தியை விட புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் நிறுவப்பட்ட திறனை அதிகமாகக் கொண்டிருந்தாலும், மின்சாரம் தயாரிப்பதற்கு தமிழக மாநிலம் நிலக்கரியையே அதிகம் சார்ந்துள்ளது.
  • மேலும், சூரியசக்தி-காற்றாற்றல் கலப்பு அமைப்பின் கட்டமைப்பானது தமிழகத்தில் இன்னும் உருவாக்கப்படவில்லை.
  • 2020-2021 ஆம் ஆண்டில் மின் உற்பத்திக்கான புதுப்பிக்க இயலாத ஆதாரங்களின் நிறுவப் பட்ட திறன் 16,219 மெகாவாட் (MW) ஆகும்.
  • காற்றாற்றல், சூரியசக்தி, நீர்வளம் மற்றும் உயிரி வளம் ஆகியப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களின் திறன்  16,276 மெகாவாட் ஆகும்.
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் பங்கு, மொத்த மின்சாரக் கலப்பில் வெறும் 22% மட்டுமே ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்