TNPSC Thervupettagam

சூரியச் சுடர்களின் சீற்றத்தினைப் படம் பிடித்த ஆதித்யா-L1

June 13 , 2024 35 days 162 0
  • இஸ்ரோவின் ஆதித்யா- L1 விண்கலத்தில் உள்ள இரண்டு தொலை உணர் கருவிகள் சமீபத்திய சூரியச் சுடர்களின் சீற்றத்தைப் படம் பிடித்துள்ளன.
  • சூரியனில் உள்ள AR13664 என்ற அதி தீவிரச் செயல்பாடுகள் மிகுந்த பகுதியில் காணப் படும் பல X - வகை மற்றும் M - வகை சுடரொளிகளுடன் இந்த சூரியச் சீற்றம் நிகழ்ந்தது.
  • இந்தியாவின் முதல் சூரிய ஆய்வுப் பயணமான ஆதித்யா- L1 விண்கலம் இந்த ஆண்டு ஜனவரி 06 தேதியன்று முதல் லக்ராஞ்சியன் புள்ளியை (L1) அடைந்தது.
  • L1 புள்ளி பூமியிலிருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் அமைந்து உள்ளதால் விண்கலமானது சூரியனைத் தொடர்ந்து ஆய்வு செய்ய அது உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்