TNPSC Thervupettagam

சூரியனின் ஒளிவட்டம்

June 5 , 2020 1638 days 631 0
  • சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் சூரியன் முழுவதிலிருந்து வெளிப்படும் ரேடியோ ஒளியின் சிறிய ஒளிச் சிதறல்களைக் கண்டறிந்துள்ளனர்.
  • இது மிக நீண்ட காலம் நிலுவையில் உள்ள ஒளிவட்ட வெப்பமாதல் பிரச்சினை குறித்து விவரிப்பதற்கு உதவ இயலும்.
  • இந்தத் தரவானது மேற்கு ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள முர்ச்சிகன் அகண்ட வெளித் தொகுப்பு ரேடியோ தொலைநோக்கியின் உதவியுடன் சேகரிக்கப்பட்டது.
  • சூரிய வளிமண்டலத்தின் வெளிப்புறப் பகுதி சூரிய ஒளிவட்டம் ஆகும்.
  • இந்த ஒளிவட்டமானது பெரும்பாலும் சூரியனின் மேற்பரப்பின் பிரகாசம் மிக்க ஒளியின் காரணமாக மறைக்கப் பட்டுள்ளது.
  • இந்த ஒளிவட்டமானது சூரியனின் மேற்பரப்பை விட 10 மில்லியன் மடங்கு அடர்த்தி குறைவானதாகும்.
  • இந்தக் குறைந்த அடர்த்தியானது அந்த ஒளிவட்டத்தை சூரியனின் மேற்பரப்பை விட பிரகாசம் குறைந்ததாக மாற்றுகின்றது.
  • சூரியனின் ஒளிவட்டத்தின் வெப்பநிலையானது அதன் துகள்களை அதிவேகத்தில் நகர வைக்கின்றது.
  • இந்த வேகம் மிக அதிக அளவில் இருப்பதால், அந்த துகள்கள் சூரியனின் ஈர்ப்பு விசையிலிருந்து விலகி விடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்