புவியின் மீது தாக்கத்தினை ஏற்படுத்தும் சூரியப் புயல்களுக்குக் காரணமான சூரியனின் சக்தி வாய்ந்த காந்தப்புலமானது, நட்சத்திரத்தின் உள்ளார்ந்தப் பகுதியில் தோன்றியதாக இதுவரை அறிவியலாளர்கள் கருதினர்.
ஆனால் சமீபத்திய ஆய்வுகளின்படி, சூரியனில் காந்தப்புலத்தினை உருவாக்கும் செயல்முறையான சூரியனின் செயல்முறை என்பது, அந்த நட்சத்திரத்தின் வெளிப்புற அடுக்குகளில் மேற்பரப்புக்கு மிக அருகில் அமைந்திருக்கலாம்.
சூரியனின் மேற்பரப்பிலிருந்து 20,000 மைல்களுக்கு கீழே காந்தப்புலம் உருவாகிறது என்று ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
இது சூரியனின் மேற்பரப்பிலிருந்து சுமார் 130,000 மைல்களுக்குக் கீழே இருந்து தோன்றியதாகக் கூறப்பட்ட முந்தைய ஆய்வுகளுக்கு முரணாக உள்ளது.