TNPSC Thervupettagam

சூரியனைச் சுற்றும் பூமியின் சுழற்சி

July 18 , 2024 8 hrs 0 min 78 0
  • சூரியக் குடும்பத்தில் உள்ள பூமியின் இயக்கமானது தற்போது சூரியனை மையமாகக் கொண்டு சுற்றி வரும் வகையில் இல்லை.
  • சூரியன் ஆனது சூரியக் குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய பொருள் மற்றும் வியாழன் கோளின் நிறையில் 1,048 மடங்கு நிறை கொண்டது.
  • இருப்பினும், இந்த வானியல் அமைப்பின் மீது பூமி செலுத்தும் ஈர்ப்பு விசையானது கிரகத்தின் மீது அதே அளவு அல்லது சிறிய அளவில் செலுத்தப்படுகிறது.
  • கெப்ளரின் மூன்றாவது விதியானது ஒன்றையொன்று சுற்றி வரும் இரண்டு வானியல் அமைப்புகளின் நிறைகளுக்கு இடையிலான ஒரு தொடர்பினையும், சுற்றுப்பாதை அளவுருக்களின் நிர்ணயத்தையும் விவரிக்கிறது.
  • பூமியானது சூரியனை அல்லாமல், ஒரு பொது நிறை மையத்தைச் சுற்றி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
  • பொதுவாக, சூரியக் குடும்பத்தில் உள்ள வானியல் அமைப்புகளின் பொது நிறை மையம் ஆனது சூரியனுக்கு அருகில் அமைந்துள்ளது.
  • இருப்பினும், வாயுக் கோள்களான வியாழன், சனி நிறை ஆகியவற்றின் மற்றும் தாக்கம் மற்றும் சுற்றுப்பாதைகளின் தாக்கம் காரணமாக அந்த மையம் அரிதாகவே சூரியனுக்குள் அமைகிறது.
  • தற்போது, பொது நிறை மையம் ஆனது சூரியனுக்கு உள்ளே இல்லாமல் வெளியே அமைந்துள்ளது எனவே, பூமி தற்போது சூரியனைச் சுற்றி வரவில்லை.
  • எனவே, புவியானது விண்வெளியில் உள்ள ஒரு புள்ளியைச் சுற்றி வருகிறது, சூரியனை அல்ல.
  • பூமியும் நிலவும் பூமியின் மையத்திலிருந்து சுமார் 5,000 கிலோமீட்டர்கள் (3,100 மைல்) தொலைவில் உள்ள ஒரு புள்ளியைச் சுற்றி வருகின்றன.
  • இருப்பினும், நிலவானது மெதுவாகப் பூமியிலிருந்து விலகிச் செல்வதால் இது மாறிக் கொண்டே இருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்