சூரியக் குடும்பத்தில் உள்ள பூமியின் இயக்கமானது தற்போது சூரியனை மையமாகக் கொண்டு சுற்றி வரும் வகையில் இல்லை.
சூரியன் ஆனது சூரியக் குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய பொருள் மற்றும் வியாழன் கோளின் நிறையில் 1,048 மடங்கு நிறை கொண்டது.
இருப்பினும், இந்த வானியல் அமைப்பின் மீது பூமி செலுத்தும் ஈர்ப்பு விசையானது கிரகத்தின் மீது அதே அளவு அல்லது சிறிய அளவில் செலுத்தப்படுகிறது.
கெப்ளரின் மூன்றாவது விதியானது ஒன்றையொன்று சுற்றி வரும் இரண்டு வானியல் அமைப்புகளின் நிறைகளுக்கு இடையிலான ஒரு தொடர்பினையும், சுற்றுப்பாதை அளவுருக்களின் நிர்ணயத்தையும் விவரிக்கிறது.
பூமியானது சூரியனை அல்லாமல், ஒரு பொது நிறை மையத்தைச் சுற்றி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பொதுவாக, சூரியக் குடும்பத்தில் உள்ள வானியல் அமைப்புகளின் பொது நிறை மையம் ஆனது சூரியனுக்கு அருகில் அமைந்துள்ளது.
இருப்பினும், வாயுக் கோள்களான வியாழன், சனி நிறை ஆகியவற்றின் மற்றும் தாக்கம் மற்றும் சுற்றுப்பாதைகளின் தாக்கம் காரணமாக அந்த மையம் அரிதாகவே சூரியனுக்குள் அமைகிறது.
தற்போது, பொது நிறை மையம் ஆனது சூரியனுக்கு உள்ளே இல்லாமல் வெளியே அமைந்துள்ளது எனவே, பூமி தற்போது சூரியனைச் சுற்றி வரவில்லை.
எனவே, புவியானது விண்வெளியில் உள்ள ஒரு புள்ளியைச் சுற்றி வருகிறது, சூரியனை அல்ல.
பூமியும் நிலவும் பூமியின் மையத்திலிருந்து சுமார் 5,000 கிலோமீட்டர்கள் (3,100 மைல்) தொலைவில் உள்ள ஒரு புள்ளியைச் சுற்றி வருகின்றன.
இருப்பினும், நிலவானது மெதுவாகப் பூமியிலிருந்து விலகிச் செல்வதால் இது மாறிக் கொண்டே இருக்கிறது.