சூரியன் குறித்த ஆய்விற்கான பார்க்கர் விண்கலம் - ஓராண்டு நிறைவு
August 20 , 2019 1926 days 660 0
நாசாவின் சூரியன் குறித்த ஆய்விற்கான பார்க்கர் விண்கலமானது ஆகஸ்ட் 12 அன்று, தனது ஓராண்டுப் பணியை நிறைவு செய்துள்ளது.
இது சூரிய-புவி அமைப்பின் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்யக் கூடிய நாசாவின் “நட்சத்திரத்துடன் வாழுதல்” என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த ஆய்வானது சூரியனின் வளிமண்டலம் குறித்த தகவல்களைச் சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதுவரை நடந்திராத, மனிதனால் உருவாக்கப்பட்ட விண்கலம் ஒன்று சூரியனுக்கு அருகில் சென்று ஆய்வு நடத்தியது இதுவேயாகும்.
இது சூரியனின் ஒளிவட்டத்திற்குக் கீழே அமைந்திருக்கும் சூரிய ஒளி அடுக்குகள் ஒவ்வொன்றும் சில ஆயிரம் டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையுடன் இருக்கும்போது சூரியனின் ஒளிவட்டம் மட்டும் ஏன் பல மில்லியன் டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையைக் கொண்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்வதை முக்கிய நோக்கங்களில் ஒன்றாகக் கொண்டுள்ளது.