TNPSC Thervupettagam

சூரியப் பிழம்புகளின் உயர் ஆற்றல் கொண்ட ஊடுகதிர் காட்சி

November 12 , 2023 251 days 153 0
  • இந்தியாவின் சூரிய ஆய்வு விண்கலமான ஆதித்யா-L1 சூரியப் பிழம்புகளின் உயர் ஆற்றல் கொண்ட முதல் ஊடுகதிர் காட்சியினை படம் பிடித்துள்ளது.
  • ஆதித்யா-L1 விண்கலத்தில் உள்ள உயர் ஆற்றல் L1 சுற்றுப்பாதை ஊடுகதிர் நிறமாலை மானி (HEL1OS) சூரியப் பிழம்புகளின் உந்துதல் மிக்க கட்டத்தினை பதிவு செய்துள்ளது.
  • அதிவிரைவு நேரம் மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட அலைக்கற்றையுடன் கூடிய சூரியனின் உயர் ஆற்றல் கொண்ட ஊடுகதிர் செயல்பாட்டைக் கண்காணிக்கச் செய்வதற்காக இந்தக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
  • சூரியப் பிழம்பு என்பது சூரிய வளிமண்டலத்தில் திடீரென தோன்றும் ஒரு வெகு பிரகாசமான ஒளியாகும்.
  • இந்தப் பிழம்புகள் ரேடியோ, ஒளியியல், புற ஊதா, மிதமான (அதிக அலைநீளம்) ஊடு கதிர்கள், கடின (குறை அலைநீளம்) ஊடு கதிர்கள் மற்றும் காமா-கதிர்கள் போன்ற மின்காந்த நிறமாலையின் அனைத்து அலைநீளங்களிலும் மேம்படுத்தப்பட்ட உமிழ்வுகளை உருவாக்குகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்