TNPSC Thervupettagam

சூரிய ஆற்றலில் இயங்கும் DEMU

July 19 , 2018 2196 days 640 0
  • சூரிய ஒளி இல்லாத பொழுதும் போதுமான ஆற்றலை உறுதிப்படுத்தும் மின்கல வங்கி வசதியுடன் கூடிய சூரிய ஆற்றலில் இயங்கும் முதல் உள்ளூர் ரயிலினை இந்தியன் ரயில்வே தொடங்கி வைத்துள்ளது.
  • ஒட்டு மொத்த ரயில் பெட்டிகளுக்குத் தேவையான ஆற்றலும் DEMU (Diesel Electric Multiple Unit) ரயில் பெட்டிகளின் மேற்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள சூரியத் தகடுகளினால் உற்பத்தி செய்யப்படும் ஆற்றலால் பூர்த்தி செய்யப்படும்.
  • 1600 குதிரைத்திறன் கொண்ட இந்த ரயில் சென்னையிலுள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலையில் (Integrated Coach Factory - ICF) உருவாக்கப்பட்டது. இதன் சூரிய ஆற்றல் அமைப்பு மற்றும் தகடுகள், மாற்று எரிபொருள்களுக்கான இந்திய ரயில்வே அமைப்பினால் (Indian Railways Organization of Alternative Fuel – IROAF) உருவாக்கப்பட்டு பொருத்தப்பட்டது.

DEMU

  • DEMU, தனிப்பட்ட என்ஜின்கள் இல்லாத எந்திரத்தினால் இயங்கும் பல அலகுகளைக் கொண்ட ரயில் ஆகும்.
  • பொதுவாக DEMU ரயில்கள், மின்விசிறி, மின்விளக்குகள், டீசலால் இயங்கும் மின் ஆக்கி போன்ற பயணிகளின் நல்வசதி அமைப்பிற்கு மின்ஆற்றலை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்