சூரிய ஒளி இல்லாத பொழுதும் போதுமான ஆற்றலை உறுதிப்படுத்தும் மின்கல வங்கி வசதியுடன் கூடிய சூரிய ஆற்றலில் இயங்கும் முதல் உள்ளூர் ரயிலினை இந்தியன் ரயில்வே தொடங்கி வைத்துள்ளது.
ஒட்டு மொத்த ரயில் பெட்டிகளுக்குத் தேவையான ஆற்றலும் DEMU (Diesel Electric Multiple Unit) ரயில் பெட்டிகளின் மேற்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள சூரியத் தகடுகளினால் உற்பத்தி செய்யப்படும் ஆற்றலால் பூர்த்தி செய்யப்படும்.
1600 குதிரைத்திறன் கொண்ட இந்த ரயில் சென்னையிலுள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலையில் (Integrated Coach Factory - ICF) உருவாக்கப்பட்டது. இதன் சூரிய ஆற்றல் அமைப்பு மற்றும் தகடுகள், மாற்று எரிபொருள்களுக்கான இந்திய ரயில்வே அமைப்பினால் (Indian Railways Organization of Alternative Fuel – IROAF) உருவாக்கப்பட்டு பொருத்தப்பட்டது.
DEMU
DEMU, தனிப்பட்ட என்ஜின்கள் இல்லாத எந்திரத்தினால் இயங்கும் பல அலகுகளைக் கொண்ட ரயில் ஆகும்.
பொதுவாக DEMU ரயில்கள், மின்விசிறி, மின்விளக்குகள், டீசலால் இயங்கும் மின் ஆக்கி போன்ற பயணிகளின் நல்வசதி அமைப்பிற்கு மின்ஆற்றலை வழங்குகிறது.