தமிழ்நாட்டின் சூரிய ஆற்றல் உற்பத்தி மற்றும் நுகர்வு ஆனது சமீபத்தில் ஒரு புதிய உச்சத்தை எட்டியது.
சூரிய ஆற்றல் உற்பத்தியானது, 6,090 மெகாவாட்டைத் தொட்டது என்ற நிலையில். செப்டம்பர் 07 ஆம் தேதியன்று பதிவான 5,985 மெகாவாட் அளவினை இது விஞ்சியது.
சூரிய ஆற்றல் நுகர்வு ஆனது 45.47 மில்லியன் அலகுகளை எட்டியது என்ற நிலையில் இது செப்டம்பர் 02 ஆம் தேதியன்று பதிவான சுமார் 43.70 மில்லியன் அலகுகள் என்ற முந்தைய அதிகபட்ச பதிவினை விஞ்சியுள்ளது.
தமிழ்நாடு மாநிலமானது 7,800 மெகாவாட்டிற்கு மேலான நிறுவப்பட்ட சூரிய ஆற்றல் உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இதுவரையில், மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட மொத்த சூரிய மின்னாற்றல் உற்பத்தி 521.73 மில்லியன் அலகாக இருந்தது.
மாநிலத்தின் தற்போதைய உச்ச கட்ட மின் தேவை சுமார் 18,115 மெகாவாட் மற்றும் தினசரி நுகர்வு சுமார் 400 மில்லியன் அலகுகள் ஆகும்.
2024-25 ஆம் ஆண்டில் இதுவரையில் பதிவான அதிகபட்ச மின் தேவை 20,830 மெகா வாட் ஆகும்.
அதிகபட்ச தினசரி நுகர்வு 454.320 மில்லியன் அலகுகள் ஆகும்.