TNPSC Thervupettagam

சூரிய ஒளியின்றி உருவாக்கப்பட்ட ஆக்ஸிஜன் மூலக்கூறு

January 29 , 2025 25 days 92 0
  • பசிபிக் பெருங்கடலின் ஆழமான பகுதியில் ஒளியின்றி உருவாக்கப்பட்ட ஆக்ஸிஜன் மூலக்கூறு காணப்படுவதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்ற நிலையில்  இது புவியில் ஆக்ஸிஜன் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறித்த நீண்ட காலக் கருத்துக்கள் மீது சவால் விடுக்கிறது.
  • இதுவரையில், சூரிய ஒளி அவசியமான ஒளிச்சேர்க்கை என்ற ஒரு செயல்முறை மூலம் மட்டுமே ஆக்ஸிஜன் உருவாக்கப்படுகிறது என்று கருதப்பட்டது.
  • ஹவாய் மற்றும் மெக்சிகோ இடையே உள்ள கடல் தளத்தின் ஒரு பரந்த தட்டையான பகுதியான கிளாரியன்-கிளிப்பர்டன் மண்டலத்தில் இந்த ஒரு நிகழ்வு கண்டுபிடிக்கப் பட்டது.
  • இந்த ஆழங்களில் நிகழும் ஆக்ஸிஜன் உற்பத்தியானது இயற்கையான மின் கலங்கள் போல செயல்படும் இயற்கையாக நிகழும் பல் உலோக முடிச்சுகள் மூலம் நிகழ்கிறது.
  • அவை கடல் நீரை (HO) மின்னாற்பகுப்பு மூலம் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாகப் பிரிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்