சூரிய ஒளி சக்திக்கான சந்தையில் இந்தியா முன்னிலை 2020 - அறிக்கை
May 17 , 2020 1657 days 669 0
மெர்காம் இந்திய ஆராய்ச்சியகம் சமீபத்தில் இந்த தரவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்தியா 2019 ஆம் ஆண்டில் 7.3 ஜிகாவாட் கொள்திறன் அளவிற்கு சூரிய ஒளி மின்சக்தியை நிறுவி, அமெரிக்கா மற்றும் சீனாவுக்குப் பிறகு உலகின் மூன்றாவது பெரிய சூரிய ஒளிசக்திக்கான சந்தையாக தனது இடத்தைப் பிடித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு டிசம்பரின் இறுதியில் சுமார் 35.7 ஜிகாவாட் அளவிற்கு ஒட்டு மொத்த சூரிய ஒளி சக்தி நிறுவல்களை நாடு கொண்டிருந்தது.
2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் நிலவரப்படி அதானி நிறுவனமானது ஒட்டு மொத்த சூரிய ஒளி சக்தி நிறுவல்களின் அடிப்படையில் மிகப்பெரிய திட்ட உருவாக்குநராக இருந்தது.
ஒட்டு மொத்த சூரிய ஒளி சக்தியின் கூரை நிறுவல்களிலும் சரி 2019 ஆம் ஆண்டிற்கான கூரை நிறுவல்களிலும் சரி டாடா பவர் சோலார் நிறுவனமானது முதலிடத்தைப் பிடித்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் நாட்டின் முன்னணி சூரிய அலை மின்மாற்றி வழங்குநராக ஹுவாவே (Huawei) நிறுவனம் அமைந்தது.