நாசா மற்றும் தேசியக் கடல்சார் மற்றும் வளிமண்டல நிர்வாகமானது (NOAA - National Oceanic and Atmospheric Administration) சூரிய ஒளி சுழற்சி 25 தொடங்கப்படுவதாக அறிவித்துள்ளது.
சூரிய ஒளி சுழற்சி 25 என்பதற்கான குறைந்தபட்ச சூரிய ஒளியானது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்தது.
இந்த சூரிய ஒளி சுழற்சியானது அபாயம் ஏதும் இல்லாமல் கடைசியாக நிகழ்ந்த “சராசரியை விட குறைந்த அளவு கொண்ட சூரிய ஒளி சுழற்சியை” விட வலுவானதாக இருக்கும்.
பூமியில் நிகழும் காலங்களைப் போன்று, சூரியனானது 11 ஆண்டு கால சுழற்சியைப் பின்பற்றுகின்றது. இந்தத் தருணத்தில் சூரிய ஒளி செயல்பாடுகளானது “குறைந்தபட்ச சூரிய ஒளி மற்றும் அதிகபட்ச சூரிய ஒளி” ஆகியவற்றிற்கிடையே மாறுபடுகின்றது.
இதுவரை, வானியலாளர்கள் இது போன்ற 24 சூரியஒளி சுழற்சிகளை ஆவணப் படுத்தியுள்ளனர். கடைசியாக இந்த சூரிய ஒளி சுழற்சியானது 2019 ஆம் ஆண்டில் முடிவடைந்தது.
சூரிய ஒளி வெடிப்புகளானது அரோரா அல்லது தாக்க ரேடியோ தகவல் தொடர்பு (impact radio communications) எனப்படும் வான்வெளியில் ஒளியினை ஏற்படுத்துகின்றது.
மிகக் கடுமையான வெடிப்புகள் பூமியின் மின்சாரத் தொகுப்புகளைக் கூட பாதிக்கும் திறன் கொண்டது.