TNPSC Thervupettagam
May 22 , 2020 1523 days 706 0
  • சூரியன் ஆனது “சூரிய ஒளி மந்த நிலை” என்ற ஆழ்ந்த காலத்திற்குள் செல்ல இருக்கின்றது. 
  • சூரியன் “குறைந்த பட்ச சூரிய ஒளி” என்ற நிலைக்குள் சென்றுள்ளது.
  • இது சூரியன் தனது நிலையைக் மாற்றிக் கொண்டிருக்கின்றது என்பதைச் சுருக்கமாகக் குறிக்கின்றது.
  • சூரியன் இந்த வருடத்தில் சூரியப் புள்ளிகளை வெளியிட்டு 100 நாட்களுக்கு மேல் ஆகின்றன.
  • சூரியனின் சுழற்சியானது 11 ஆண்டுகளுக்கு இருக்கும்.
  • இது “சூரிய ஒளி சுழற்சி” என்றும் “சூரிய ஒளி காந்தச் செயல்பாட்டுச் சுழற்சி” என்றும் அழைக்கப்படுகின்றது.
  • சூரிய ஒளி சுழற்சியின் கீழ், அதிகபட்ச சூரிய ஒளி மற்றும் குறைந்தபட்ச சூரிய ஒளி ஆனது முறையே அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்ச சூரியப் புள்ளிகளின் காலத்தைக் குறிக்கின்றது.
  • சூரியப் புள்ளிகள் ஒவ்வொரு 11 ஆண்டுகளுக்கும் ஒரு முறை மங்கி விடுகின்றன.
  • சூரியப் புள்ளிகள் காந்தத் தன்மை உடையதாக உள்ளன.
  • சூரியப் புள்ளிகள் 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கண்டறிப்பட்டன.
  • இது கலீலியோ கலிலி என்பவரால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்