TNPSC Thervupettagam

சூரிய சக்தி பூங்கா திட்டம்

December 30 , 2023 202 days 254 0
  • ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களும் சூரிய சக்தி பூங்கா திட்டத்தின் மூலம் அதிக திறன்களை உருவாக்கியுள்ளன.
  • “சூரிய சக்தி பூங்காக்கள் மற்றும் மாபெரும் சூரிய சக்தி மின் உற்பத்தி ஆலைகளின் மேம்பாட்டிற்கான திட்டமானது 20,000 மெகாவாட் மொத்தத் திறன் உற்பத்தி என்ற நோக்குடன் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது.
  • மேலும், குறைந்தபட்சமாக 50 சூரிய சக்தி பூங்காக்களை அமைப்பதற்காக சூரிய சக்தி பூங்கா திட்டத்தின் கீழான ஆலைகளின் உற்பத்தி திறன் இலக்கு, 2017 ஆம் ஆண்டு மார்ச் மாத்தத்தில் 40,000 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டது.
  • இத்திட்டத்தின் காலக்கெடுவானது 2023-24 ஆம் ஆண்டு வரை நிர்ணயிக்கப் பட்டு உள்ளது.
  • 10,401 மெகாவாட் உற்பத்தித் திறனில், ராஜஸ்தான் இதுவரையில் 3065 மெகாவாட் திறனையும், ஆந்திரா 3050 மெகாவாட்டையும் நிறுவியுள்ளன.
  • கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவை முறையே 2000 மெகாவாட் மற்றும் 1000 மெகாவாட் திறன்களை நிறுவியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்