சூரிய சுழற்சியின் நீள்நிலையினைக் கணிப்பதற்கான புதிய முறை
August 23 , 2024 92 days 112 0
இந்திய வானியற்பியல் கழகத்தின் (IIA) வானியலாளர்கள் அடுத்து வரவிருக்கும் சூரிய சுழற்சியின் நீள்நிலையினைக் கணிப்பதற்காக ஒரு புதிய முறையைக் கண்டறிந்து உள்ளனர்.
IIA கழகத்தின் கொடைக்கானல் சூரியக் கண்காணிப்பு ஆய்வகத்தில் இருந்து பெறப் பட்ட 100 ஆண்டுகால சூரிய தரவுகளைப் பயன்படுத்தி வானியலாளர்கள் ஒரு புதிய தொடர்பைக் கண்டறிந்துள்ளனர்.
விண்வெளியின் வானிலை ஆனது சூரிய குடும்பத்தில் உள்ள மாறுபட்ட நிலைமைகள் மற்றும் சூரியன் மற்றும் சூரியக் காற்றால் பாதிக்கப்படும் அதன் ஹீலியோஸ்பியர் (சூரியன் சூழ் வளிமண்டலம்) ஆகியவற்றுடன் தொடர்புடையது.
விண்வெளி வானிலையின் முக்கிய கூறுகள் சூரியப் புயல், சூரிய வெப்ப உமிழ்வுகள் மற்றும் சூரியச் சுடர்கள் ஆகியனவாகும்.
சூரிய சுழற்சியின் குறைந்தபட்ச ஆண்டில், சூரிய மேற்பரப்பில் உள்ள மீவெப்பச்சலன மண்டலங்களின் அகலம் அடுத்தடுத்த சூரியச் சுழற்சியின் அதிகபட்ச அளவில் சூரிய கரும்புள்ளிகளின் எண்ணிக்கையுடன் ஒரு தொடர்புடையது என்பதை அவர்கள் நன்கு கண்டறிந்தனர்.
இந்த எளிய முறையை விண்வெளி வானிலை முன்னறிவிப்பில் பயன்படுத்தலாம்.