TNPSC Thervupettagam

சூர்யசக்தி கிஷான் யோஜனா - குஜராத்

June 27 , 2018 2215 days 655 0
  • குஜராத் அரசாங்கம் விவசாயிகளுக்காக சூர்யசக்தி கிஷான் யோஜனா எனும் சூரிய சக்தி திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • இந்த திட்டம் விவசாயிகள் அவர்களின் சொந்த பயன்பாட்டிற்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் மிகுதியான மின்சார ஆற்றலைக் கட்டமைப்பிற்கு வழங்கி பணம் ஈட்டவும் வழிவகுக்கிறது.

  • விவசாயிகள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் மற்றும் மாநிலத் தேவைக்கும் வழங்கவும் முடியும் என்ற வகையில் இந்தத் திட்டம் நாட்டின் முதல் திட்டம் என்றப் பெயரைப் பெற்றுள்ளது.
  • மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் இத்திட்டத்திற்கான மதிப்பில் 60 சதவிகித மானியத்தை வழங்கும்.
  • இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு5-6 என்ற வட்டி விகிதத்துடன் 35 சதவிகிதம் மலிவுக்கடனாக வழங்கப்படும். 5 சதவிகித செலவு விவசாயிகள் ஏற்கும் படி இருக்கும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்