சூர்ய கிரண் - 2017 : இந்தியா - நேபாளம் கூட்டு இராணுவப் பயிற்சி
September 6 , 2017 2637 days 941 0
இந்திய - நேபாளத்திற்கு இடையேயான 12வது இராணுவ கூட்டு பயிற்சியான சூர்யா கிரண் நேபாளத்தின் சல்ஜ்ஹண்டியில் (Saljhandi) உள்ள தேசிய இராணுவ யுத்தப்பள்ளியில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த 14 நாள் பயிற்சியானது, தீவிரவாத எதிர்ப்பு, வனப்பகுதியில் ஏற்படும் சண்டை மற்றும் இயற்கைப் பேரழிவு மேலாண்மை நடவடிக்கை ஆகியவற்றிற்கு தேவைப்படும் திறன்களின் மீது கவனம் செலுத்தும்.
இந்த சூர்ய கிரண் பயிற்சியானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நேபாளத்திலும் இந்தியாவிலும் மாறி மாறி நடத்தப்படும் இருதரப்பு தொடர்பயிற்சியாகும்.
இது இந்தியா மற்ற நாடுகளுடன் நடத்தும் பயிற்சி வகைகளில் இராணுவம் பங்கேற்கும் அளவைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய பயிற்சியாகும்.
இதன் 11வது பதிப்பு உத்தரகாண்டில் உள்ள பித்தோர்கார் என்ற இடத்தில் நடத்தப்பட்டது.