TNPSC Thervupettagam

சூறாவளிப் பெயர்களின் புதிய பட்டியல்

May 2 , 2020 1542 days 2145 0
  • இந்திய வானிலை அமைப்பானது வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல் உள்ளிட்ட வட இந்தியக் கடல் பகுதிகளில் ஏற்படும் வெப்பமண்டலச் சூறாவளிகளின் பெயர்களைக் கொண்ட ஒரு புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது.
  • இந்தப் புதிய பட்டியலானது இந்தியாவிலிருந்து 13 பெயர்கள் உள்பட 169 பெயர்களைக் கொண்டுள்ளது.
  • உலக வானிலைச் சங்கத்தின் 13 உறுப்பினர் நாடுகளால் (13 நாடுகளால் 13 பெயர்கள்) இது பரிந்துரை செய்யப் பட்டது.
  • இந்தியா, இலங்கை, மாலத் தீவுகள், மியான்மர், ஓமன், தாய்லாந்து, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஏமன், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஈரான் ஆகியவை இந்த 13 நாடுகளாகும்.
  • காடி, தேஜ், ஆஷ், நீர், வியோம், ஜார், ஜலாதி, முரசு, புரோபஹோ, பிரபஞ்சன், கும்பி, அம்புட் மற்றும் லேகா ஆகிய பெயர்கள் இந்தியாவினால் வழங்கப் பட்டு உள்ளன.
  • அதில் நீர் மற்றும் முரசு என்பவை தமிழ்ப் பெயர்களாகும்
  • புது தில்லியில் உள்ள சிறப்புப் பிராந்திய வானிலை மையமானது வங்காள விரிகுடா மற்றும அரபிக் கடலில் ஏற்படும் சூறாவளிகளுக்கு பெயரிடும் பணியினை மேற்கொள்கின்றது.  
  • 2004 ஆம் ஆண்டுப் பட்டியலில் உள்ள ஒரே ஒரு பெயர் மட்டும் இன்னும் வைக்கப் படவில்லை – அது தாய்லாந்தால் அளிக்கப்பட்ட அம்பன் எனும் பெயர். மற்ற 63 பெயர்கள் அனைத்தும் வைக்கப்பட்டு விட்டன.
  • 2004 ஆம் ஆண்டில் 8 நாடுகள் ஒவ்வொன்றும் 8 பெயர்கள் என்ற அளவில் மொத்தம் 64 பெயர்களை அளித்தன.
  • 2004 ஆம் ஆண்டின் பட்டியலில் உள்ள 8 நாடுகள் இந்தியா, வங்கதேசம், மாலத்தீவுகள், மியான்மர், பாகிஸ்தான், ஓமன், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகியனவாகும்.
  • தற்போது இதில் சேர்க்கப் பட்டுள்ள நாடுகள் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, ஏமன் மற்றும் ஈரான் ஆகியனவாகும்.

சூறாவளியின் இதரப் பெயர்கள்
  • சீனக் கடல் மற்றும் பசுபிக் கடலில் - டைபூன்கள்.
  • கரீபியன் கடல் மற்றும் அட்லாண்டிக் கடலில் உள்ள மேற்கு இந்தியத் தீவுகளில் - ஹரிக்கேன்கள்.
  • மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்காவின் கினியா பகுதியில் - டோர்நடோஸ்.
  • வடமேற்கு ஆஸ்திரேலியாவில் - வில்லி-வில்லிஸ்.
  • இந்தியப் பெருங்கடலில் - வெப்பமண்டலச் சூறாவளிகள். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்