TNPSC Thervupettagam

சூழலியல் அச்சுறுத்தல் பதிவேடு

September 18 , 2020 1529 days 784 0
  • இது வருடாந்திர தீவிரவாத மற்றும் அமைதிக் குறியீடுகளை வெளியிடும் ஒரு கொள்கை வகுக்கும் அமைப்பான பொருளாதார மற்றும் அமைதி மையத்தினால் (IEP - Institute for Economics and Peace) தொகுக்கப் பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்

  • அடுத்த 30 ஆண்டுகளில், அதாவது 2050 ஆம் ஆண்டுவாக்கில் 141 நாடுகள் குறைந்தது 1 சூழலியல் அச்சுறுத்தலையாவது எதிர்கொள்ளும் என்று இந்த அறிக்கை கூறுகின்றது.
  • ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக், சாட், இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட அதிக எண்ணிக்கையிலான சூழலியல் அச்சுறுத்தல்களைக் கொண்ட 19 நாடுகள் உலகில்  குறைந்த அமைதியுள்ள 40 நாடுகளில் உள்ளடங்கும்.
  • ஆப்பிரிக்காவின் துணை சகாராப் பகுதி, தெற்கு ஆசியா, மத்தியக் கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா ஆகியவை அதிக எண்ணிக்கையிலான சூழலியல் அச்சுறுத்தல்களை எதிர் கொள்கின்றன.
  • 2040 ஆம் ஆண்டுவாக்கில், மொத்தம் 5.4 பில்லியன் மக்கள் (உலகின் கணிக்கப் பட்ட மக்கள் தொகையில் பாதிக்கும் மேல்) அதிக மற்றும் தீவிரமான நீர்ப் பிரச்சினையுள்ள இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட 59 நாடுகளில் வசிக்க உள்ளனர்.
  • 3.5 பில்லியன் மக்கள் 2050 ஆம் ஆண்டுவாக்கில் உணவுப் பாதுகாப்பு  நிச்சயமற்றத்  தன்மையினால் பாதிக்கப்படவுள்ளனர்.
  • ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா போன்ற அதிக இடர்களைத் தாங்கும் தன்மையுள்ள பகுதிகள் சூழலியல் அச்சுறுத்தல்களின் அதிகப்படியான தாக்குதல்களிலிருந்து விடுபடாமல் இருக்கும்.
  • சுவீடன், நார்வே, அயர்லாந்து, ஐஸ்லாந்து போன்ற வளர்ந்த நாடுகள் எந்தவொரு அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளாது.
  • ஒட்டு மொத்தமாக 16 நாடுகள் எந்தவொரு அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்